“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில் விசிகவுக்கு முதலில் ஆறு தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் விசிகவோ இரட்டை இலகத்தில் தொகுதிகளைக் கேட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. விசிக ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். நீண்ட இழுபறிக்குப் பின் திமுக-விசிக இடையே தொகுதிப் பங்கீடு நேற்று ஒருவழியாக இறுதிசெய்யப்பட்டது.

“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

விசிகவுடன் ஆறு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதால் தான் ஆறு தொகுதிகளுக்கு சம்மதிக்கப்பட்டது. தொண்டர்கள் கட்சித் தலைமையின் முடிவை மதித்து தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்றார். திருமாவை தன் பக்கம் இழுக்க முடியாத ஆதங்கத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் கமல் அவர் மீது திடீர் பாசத்தைக் காட்டினார்.

“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது பேசிய கமல், “தமிழகத்தில் சமூக நீதியைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் உதட்டளவில் தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, பேசுபவர்கள் சமூக நீதியை உங்கள் உயர்வுக்கு நாங்கள் போட்ட பிச்சைதான் என்று பேசுகின்றனர். சமூக நீதி பிச்சையல்ல, உரிமை. அதை புரிய வைக்கத்தான் நாங்கள் அரசியலை முன்னெடுத்து வந்துள்ளோம்.

“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

சமூக நீதியைப் பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதி ஒதுக்கியுள்ளனர். என் தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம். அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள் என்று பேசுகிறேனே. ஆனால், அங்கு போகிறார்களே என்று பார்க்கிறீர்களா? யார் அங்கு போக வேண்டுமோ அங்கு போவார்கள். யார் வர வேண்டுமோ இங்கு வருவார்கள்” என்று பேசியுள்ளார்.

“அய்யகோ என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதி தானா? ” – திடீர் ‘அண்ணனாக’ மாறிய கமல்!

கட்சி தொடங்கிய பின் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த கமலால் ஒருநாள் கூட திருமாவைச் சந்திக்க மனம்வரவில்லை. ஆனால் இப்போது திருமா மீது திடீர் பாசத்தைக் காட்டுவதாக விசிக ஆதரவாளர்களும் திமுக அனுதாபிகளும் விமர்சித்துவருகின்றனர்.