கஜானா காலி… அது வெள்ளை அறிக்கை இல்லை; மஞ்சள் கடுதாசி – கமல் விமர்சனம்!

 

கஜானா காலி… அது வெள்ளை அறிக்கை இல்லை; மஞ்சள் கடுதாசி – கமல் விமர்சனம்!

திமுக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; மஞ்சள் கடுதாசி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தலின் போது நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. தற்போதைக்கு ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழலில் முக்கியமான வாக்குறுதிகள் இனிமேல் தான் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கான அறிவிப்புகள் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கு தான் திமுக அரசு ட்விஸ்ட் வைத்தது.

கஜானா காலி… அது வெள்ளை அறிக்கை இல்லை; மஞ்சள் கடுதாசி – கமல் விமர்சனம்!

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக திடீரென வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், அதிமுக அரசால் தமிழகத்திற்கு வருவாய் குறைந்து விட்டதாகவும் அதிரடி நடவடிக்கையின் மூலமாகவே வருவாயை மீட்டெடுக்க முடியும் என்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததால் சீர்திருத்தத்தை தாமதமாக்க முடியாது என்றும் கடந்த 7 ஆண்டுகளாக சரியான ஆளுகை இல்லாததால் பெரும்பாலான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாக தெள்ளத் தெளிவாக தெரிவித்து விட்டது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு வெள்ளை அறிக்கையின் மூலம் ஈடு செய்ய நினைப்பதாக எதிர்க்கட்சிகள் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தால் அரசின் கடன் அதிகரிக்கக் கூடும், இதை விளம்பரப்படுத்துவதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு வெள்ளை அறிக்கை என்றே பேரில் மஞ்சள் கடுதாசி வெளியிட்டிருப்பதாக கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.