Home அரசியல் "கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்" - சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

“கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்” – சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிவ் லைஃப்ங்கிறது எனக்கு வேணும். அதனால் ஐந்து வருடத்தில் நடக்கக்கூடிய வேலையைச் சொல்றேன். ஐந்து வருடம்தான். அதுக்கப்புறம் ஒரு பத்து வருடம் வேலை செய்யனும். அதுக்கப்புறம் சக்கர நாற்காலியில் எல்லாம் இருந்துக்கிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று பேசினார். இதற்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டினர்.

"கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்" - சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!
"கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்" - சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!

கமல்ஹாசன் கலைஞர் கருணாநிதியைத் தான் கூறுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அரசியலில் எம்ஜிஆரின் வாரிசு என நொடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் அவர் மறந்தும் கூட கருணாநிதியின் பெயரை உச்சரிப்பதில்லை. கமலின் இப்பேச்சு திமுக தொண்டர்களிடமும் அனுதாபிகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூடவே மாற்றுத்திறனாளிகளும் கொந்தளித்தனர்.

இதையடுத்து ‘மன்னிப்பு கேள் கமல்’ என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இதுதொடர்பாக விளக்களித்துள்ள கமல்ஹாசன், “சக்கர நாற்காலி விவகாரத்தில் கலைஞரைக் கிண்டல் செய்ததாகக் கூறுபவர்கள் அறிவிலும் அனுபவத்திலும் வயதிலும் சிறியவராக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். கலைஞர் மீது எனக்கு இருக்கும் மரியாதை அவருக்குத் தெரியும். (கீழே உள்ள வீடியோவில் 9.30-10.40 நிமிடம் வரையிலான பேச்சை கேட்கவும்)

அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறியதின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பார். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதைத் தள்ளிவந்த கூட்டங்களில் நானும் ஒருவன். ஆகவே அவரின் வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. என்னுடைய முதுமை பற்றியும் நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்பது குறித்தும் தான் பேசினேன். சக்கர நாற்காலி ஏற்படுவது ஒரு அவலநிலை. அப்படியொரு அவலநிலை வந்தாலும் நான் என்ன செய்வேன் என்பதேயே சொன்னேன்”

"கலைஞரின் சக்கர நாற்காலியை தள்ளியவர்களில் நானும் ஒருவன்" - சீமான் மீட்டரை கச்சிதமாக பிடித்த கமல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews