திமுகவுடன் கூட்டணியா?- கமல்ஹாசன் விளக்கம்

 

திமுகவுடன் கூட்டணியா?- கமல்ஹாசன் விளக்கம்

எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பீர்களா ? குரல் கொடுக்கும் தேவை வந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன் தற்போது அந்த தேவை வந்துள்ளது.

ஈகோவை விட்டுக் கொடுத்து, ரஜினியுடன் கூட்டணி சேர தயார் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஒரு வருடத்துக்கு முன்னதாகவே ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள  இறையுமன்துறை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், “ திமுகவோடு கூட்டணி குறித்து உதயநிதி உடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யுகம் தான். யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கேரளா உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளது. மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பது இந்த வெற்றியின் அடையாளம்.

திமுகவுடன் கூட்டணியா?- கமல்ஹாசன் விளக்கம்

நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள் ரசிகர்கள் சந்தோசமாக ஏற்கிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்” எனக் கூறினார்.