லோகேஷ் கனகராஜ்- கமல் கூட்டணியில் உருவாகும் ‘விக்ரம்’

 

லோகேஷ் கனகராஜ்- கமல் கூட்டணியில் உருவாகும் ‘விக்ரம்’

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து எடுத்த கைதி படமும் வெற்றிபெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 64’ ஆன மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா பரவலால் தள்ளி போகி கொண்டே உள்ளது. இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. அனிரூத் இசையமைக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என அறிவித்துப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்புக்கான டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது கமல் நடிக்கும் 232 ஆவது படமாகும்