30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் இன்றைய விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம்.. கமல் நாத்

30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் இன்றைய விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம்.. கமல் நாத்

30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் தற்போது உள்ள விவசாயிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்று காங்கிரசின் கமல் நாத் தெரிவித்தார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி நேற்று விவசாயிகள் நேற்று பாரத் பந்த் நடத்தினர். விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த சூழ்நிலையில் காங்கிரசின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் இன்றைய விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம்.. கமல் நாத்
கமல் நாத்

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறுகையில், இவ்வளவு எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறார்கள் விவசாயிகள் என்ன முட்டாள்களா? 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் தற்போது உள்ள விவசாயிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இன்று விவசாயிகள் சிறந்த தகவல்களை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளுக்கும் இன்றைய விவசாயிகளுக்கும் பெரிய வித்தியாசம்.. கமல் நாத்
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)

விவசாயிகள் நேற்று நடத்திய 4 மணி நேர பாரத் பந்த்தால் பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கும், விவசாய தலைவர்களுக்கும் இடையே இன்று 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பாரத் பந்த் நடந்த பிறகு இந்த பேச்சு வார்த்தை நடப்பதால் விவசாயிகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.