தோல்வி.. கட்சிக்குள் எதிர்ப்பு எதிரொலி… நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்

தோல்வி.. கட்சிக்குள் எதிர்ப்பு எதிரொலி… நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்

தேர்தல் தோல்வி, கட்சிக்குள் எதிர்ப்பு காரணமாக, நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறியதால் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க அரியணையில் ஏறியது. இந்நிலையில் அண்மையில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே வென்றது.

தோல்வி.. கட்சிக்குள் எதிர்ப்பு எதிரொலி… நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்
ஜோதிராதித்ய சிந்தியா

இதனால் கமல் நாத்துக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹர்பால் சிங் தாகூர், கட்சியின் மோசமான செயல்பாட்டுக்கு பொறுப்பேற்று, கட்சியின் மாநில தலைவர் பதவியையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் கமல் நாத் ராஜினாமா செய்ய வேண்டும். கமல் நாத் மற்றும் திக்விஜய சிங் தலைமையில் இடைத்தேர்தலை சந்தித்தோம். அவர்கள் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

தோல்வி.. கட்சிக்குள் எதிர்ப்பு எதிரொலி… நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்
காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், அரசியலிருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக கமல் நாத் மறைமுகமாக தெரிவித்துள்ளார். கமல் நாத் இது தொடர்பாக கூறுகையில், நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த லட்சியங்களும் இல்லை அல்லது எந்த பதவிக்கும் பேராசைகளும் இல்லை. ஏற்கனவே நான் அதிகம் சாதித்து விட்டேன். நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.