மத்திய பிரதேச அமைச்சரவையில் திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடமில்லை… கொளுத்தி போடும் கமல் நாத்

மத்திய பிரதேச அமைச்சரவையில் திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடமில்லை… கொளுத்தி போடும் கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் முதல்வா சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்தார். நேற்று புதிதாக 28 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இவர்களில் 12 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு சிந்தியாவுடன் பா.ஜ.க.வுக்கு வந்தவர்கள்.

மத்திய பிரதேச அமைச்சரவையில் திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடமில்லை… கொளுத்தி போடும் கமல் நாத்

இதனையடுத்து மத்திய பிரதேச அமைச்சரவையில் மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் சிந்தியாவின் ஆதரவாளர்கள் 14 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை வைத்து பா.ஜ.க.வுக்குள் சிண்டு முடிக்கும் வேலையை நாசுக்காக செய்ய ஆரம்பித்து விட்டார் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத். மத்திய பிரதேச அமைச்சரவையில் இடம் கிடைக்காத பல திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்காக தான் வருத்தம் கொள்வதாக கமல் நாத் தெரிவித்துள்ளர்

மத்திய பிரதேச அமைச்சரவையில் திறமையான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடமில்லை… கொளுத்தி போடும் கமல் நாத்
இது தொடர்பாக கமல் நாத் டிவிட்டரில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காத பல திறமையான, அர்ப்பணிப்புள்ள மற்றும் மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்காக நான் மகிவும் வருத்தப்படுகிறேன். மத்திய பிரதேச அமைச்சரவையில் மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 14 பேர் தற்போது எம்.எல்,ஏ.க்களாக இல்லை. இது அரசியலமைப்பு ஏற்பாடுகளில் ஒரு குழப்பம் மற்றும் மாநில மக்களுடன் ஒரு கேலிக் கூத்து என பதிவு செய்து இருந்தார்.