ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை திடீரென சந்தித்த கமல் நாத்…

 

ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை திடீரென சந்தித்த கமல் நாத்…

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. அடுத்த மாதம் 21ம் தேதியன்று அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில்தான் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் கமல் நாத், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை திடீரென சந்தித்த கமல் நாத்…
கமல் நாத், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

போபாலில் நேற்று முன்னாள் முதல்வர் கமல் நாத், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கமல் நாத் சந்தித்ததாக கூறப்பட்டது. கமல் நாத்தும், சிவ்ராஜ் சிங் சவுகானும் சந்தித்து பேசிய போது எடுத்த படத்தை மத்திய பிரதேச முதல்வர் அலுவலகம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை திடீரென சந்தித்த கமல் நாத்…
கமல் நாத், கவர்னர் லால்ஜி டான்டன்

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி கமல் நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. இருப்பினும், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் 18 மாதங்களில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த மார்ச் 20ம் தேதியன்று முதல்வர் கமல் நாத் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் லால்ஜி டான்டனிடம் கொடுத்தார். அதற்கு அடுத்த 3வது நாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார்.