தேங்காய் உடைப்பதை தவிர 7 மாதமாக சிவ்ராஜ் சிங் சவுகான் ஒன்றும் செய்யவில்லை.. கமல் நாத் கிண்டல்

 

தேங்காய் உடைப்பதை தவிர 7 மாதமாக சிவ்ராஜ் சிங் சவுகான் ஒன்றும் செய்யவில்லை.. கமல் நாத் கிண்டல்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த 7 மாதங்களில் தேங்காய் உடைப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கமல் நாத் கிண்டல் செய்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றினால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும், அதேசமயம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் அந்த 2 கட்சிகளும் இடைத்தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தேங்காய் உடைப்பதை தவிர 7 மாதமாக சிவ்ராஜ் சிங் சவுகான் ஒன்றும் செய்யவில்லை.. கமல் நாத் கிண்டல்
கமல் நாத்

போபாலில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முன்னாள் முதல்வர் கமல் நாத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கடந்த 7 மாதங்களில் சிவ்ராஜ் சிங் சவுகான் தேங்காய் உடைத்தல், தவறான அறிவிப்புகள் மற்றும் அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் சில நேரங்களில் சீனா, மக்களின் கவனத்தை திசை முன்னுக்கு வருகிறது. அவை மக்களன் கவனத்தை திசை திருப்புகின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மீண்டும் விவசாய கடன் தள்ளுபடி இடம் பெற்றுள்ளது குறித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், முந்தைய அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் (காங்கிரஸ்) நிறைவேற்றவில்லை. அவர்கள் அதை மறந்து எழுதி விட்டார்கள் என நக்கலாக தெரிவித்தார்.

தேங்காய் உடைப்பதை தவிர 7 மாதமாக சிவ்ராஜ் சிங் சவுகான் ஒன்றும் செய்யவில்லை.. கமல் நாத் கிண்டல்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஏனெனில் சிவ்ராஜ் ஜி திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை என்று சிவ்ராஜ் சிங் சொல்கிறார். ஆனால் அவரது சொந்த அமைச்சர் சட்டப்பேரவையில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்த முறையும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.