“தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார்” : குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார்” : குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கமல் ஹாசன் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்த நிலையில் , ஒரு இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் கூட்டணி வெற்றிபெற முடியவில்லை.

“தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார்” : குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

குறிப்பாக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட கமல் ஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் தோல்விக்கு பிறகு அக்கட்சியிலிருந்து துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா உள்ளிட்ட பல கட்சியிலிருந்து விலகினர்.

“தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார்” : குமரவேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சி.கே. குமரவேல், ” ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற போதே தலைவருக்கான தகுதியை கமல் இழந்துவிட்டார். தனிமனித பிம்பத்தை சார்ந்து இருக்கிற அரசியல் விடவும் மதசார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.ஏற்கனவே விலகியவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை உள்ளதை கமலும் அறிவார். அரசியல் ஆலோசகர்களும் அவர்களின் தவறான வழிகாட்டுதலும் தான் தோல்விக்கு காரணம். 233 தொகுதிகள் போனாலும் பரவாயில்லை ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என கமல் நினைத்து விட்டார்” என்றார்.