“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

 

“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

தமிழக அரசியல் களம் உச்சகட்ட தகிப்பில் இருக்கிறது. தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அவதூறாக பேசினார், இழிவாக பேசினார் என வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு அனல் பறக்கிறது. தற்போது எம்பிக்களும் எம்எல்ஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கின்றனர். அந்த வகையில் தயாநிதி மாறன் எம்பி தொண்டாமுத்தூரில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்க்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

பிரச்சாரத்தில் பேசிய அவர், “தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. தொண்டாமுத்துரைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஏ டீம் என்றால், கமல் பி டீம், சீமான் சி டீம். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக போட்டி, மக்கள் நிதி மய்யம் வேட்பாளர் மாற்றம் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

கமல்ஹாசன் முதலில் தொண்டாமுத்தூருக்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தார். பின்னர் திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதியை அறிவித்த பிறகு ஹாஜகான் என்ற இஸ்லாமிய நண்பரை வேட்பாளராக அவர் அறிவிக்கிறார். இதன் பின்னணியில் வேலுமணி உள்ளார். வேலுமணிதான் கமலுக்குப் பண பட்டுவாடா செய்கிறார். ஏனெனில் பாஜகவின் பி டீம் கமல்.

அதுமட்டுமல்லாது சிறுபான்மையினர் ஓட்டைப் பிரிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினர் ஓட்டுகளைச் சிதறச் செய்தால் அவர்கள் வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இந்து, இஸ்லாமியர்களைப் பிரிக்க வெறுப்பு அரசியலைச் செய்து இந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். சிறுபான்மையினரை ஒடுக்க நினைத்தால் அதற்கு எதிராக ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார்” என்றார்.

“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

தயாநிதி மாறனின் சொன்னதிலிருந்து சில புள்ளிகளை இணைக்க முடிகிறது. நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் தனக்கு கேட்ட தொகுதி ஒதுக்கவில்லை என வெளியே வருகிறார். இதுதொடர்பாக சீமானின் கேட்டதற்கு அவர், பட்டுக்கோட்டை தொகுதியை மன்சூர் கேட்டதாகவும், கொடுக்க முடியாது என மறுத்ததால் கட்சியை விட்டு விலகியதாகவும் கூறுகிறார். அதற்குப் பின் தொண்டாமுத்தூரில் போட்டியிட மன்சூர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

“எஸ்பி வேலுமணியிடம் பொட்டி வாங்கிய கமல்… தொண்டாமுத்தூரில் திடீர் வேட்பாளர் மாற்றம்”

அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, பாய் பெட்டி வாங்கிட்டு நிற்கிறீர்களா என்று மக்கள் கேட்க, போட்டியிடவில்லை என்று முடிவெடுக்கிறார். கவனிக்க அவர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. தற்போது அங்கு அவர் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. தொண்டாமுத்தூரில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பதும் கவனித்தக்கது. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் இஸ்லாமியர்கள் வாக்கு தனக்கு விழுவது கஷ்டம் என்று அறிந்துகொண்டு தான் வேலுமணி மன்சூரை களமிறக்கியிருக்கிறார் என்பதே எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு.