ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

 

ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததை அடுத்து தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவு தருவதாக, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அதிரடியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழக அரசின் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் விசாரித்தார்களா? அவற்றை விசாரித்துவிட்டு சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கலாமே என கேள்வி கேட்கிறார். நல்லவர்கள் மீது குற்றம் சுமத்தினால் நான் கேட்பேன் என அந்த வீடியோவில் கூறுகிறார்.சூரப்பா மீது எந்த தவறும் இல்லை என்றால் விசாரணையில் வெளிப்படும். ஊழல் நடந்துள்ளதா? நடக்கவில்லையா என்பது விசாரணையில் வெளிப்பட்டுவிடும். ஒருவேளை சூரப்பா நேர்மையானவராக இருந்தால் அந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் முடிவு செய்து கொள்ளட்டும். கமல் எந்தவகையில் சூரப்பாவுக்கு உத்தரவாதம் தருகிறார்? சூரப்பா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் கமலிடம் கிடைத்த ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்புகின்றனர்.

ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

சூரப்பா மீது புகார் அளித்தது, அந்த பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும் பேராசிரியர்கள் என்பதுதான் தகவல். ஒருவர், அரசின் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர் மீது தவறில்லை என்று ஒரு கட்சியின் தலைவரே முன்னின்று வீடியோ வெளியிடுவது ஏன் என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.சூரப்பா மீது எந்த தவறும் இல்லை என்றால் விசாரணையில் வெளிப்படும். ஊழல் நடந்துள்ளதா? நடக்கவில்லையா என்பது விசாரணையில் வெளிப்பட்டுவிடும்.

ஒருவேளை சூரப்பா நேர்மையானவராக இருந்தால் அந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் முடிவு செய்து கொள்ளட்டும். கமல் எந்தவகையில் சூரப்பாவுக்கு உத்தரவாதம் தருகிறார்? சூரப்பா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் கமலிடம் கிடைத்த ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்புகின்றனர். அப்படிக் கிடைத்த ஆதாரங்களை பொதுவெளியில், கமல் வெளியிடலாமே என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருவேளை சூரப்பா நேர்மையானவராகவே இருந்தாலும், சமூகநீதிக்கு எதிரானவர் என்பது அவரின் கடந்தகால செயல்பாடுகளிலிருந்து தெரியும்.

ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு கல்வி நிறுவனத்தை, தமிழக கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு செலுத்திய ஒரு கல்வி நிறுவனத்தை சிதைத்த பெருமை சூரப்பாவை சேரும். துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் கவர்னரிடம் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சூரப்பாவை கொண்டு வந்து கவர்னர் பன்வாரிலால் நியமித்தார். அப்போதே அவருக்கு எதிர்ப்பு இருந்தது.

தமிழ்நாட்டிலேயே தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் இருந்தும் ,அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏன் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்கிற கேள்வி எழுந்தது. அதன் உள்நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர் . அப்படி சந்தேகம் எழுப்பியது போலவே சூரப்பாவின் நடவடிக்கைகள் இருந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவுகளில் சமஸ்கிருதத்தை சேர்ப்பது , வேதத்தை பாடமாக வைக்க வேண்டும் என பல முன்னெடுப்புகளை செய்தார் . அப்போது சர்ச்சை ஆனதால் சேர்க்கப்படவில்லை.

ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

அதன் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து உயர்நிலைக் கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுத்தார். பல்கலைக்கழகத்தை சுயநிதி நிறுவனமாக மாற்றுவதன் மூலம், மாநில அரசிடமிருந்து விடுவிப்பது என்கிற முன்வரைவை முன்வைத்தார். அதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக மத்திய அரசின் உயர்கல்வித் துறைக்கு செல்லும். சுய நிதியில் இயங்கும் என்றால் தமிழகத்தின் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் அங்கு சென்று சேர முடியாத நிலை உருவாகும். இப்படி பல குழப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் விளைவித்தவர்.

சூரப்பவை நீக்க வேண்டுமென பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளுக்குள்ளேயே போராட்டம் நடத்தி வந்தனர். அந்த சூழ்நிலையில்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தனது மகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் வேலை மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் பல நிதி முறைகேடுகள் என சுமார் 300 கோடி ரூபாய் அளவில் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன . தன் மீது எந்த குற்றமும் இல்லை என சூரப்பா சொல்லி வரும் நிலையில் அதை அவர் நிரூபிக்க போகிறார் . இதற்கு கமல் ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினியை விட ஆபத்தான அரசியல்வாதி கமல் : ‘பொளேர்’ என வெளுக்கும் நெட்டிசன்கள்

ரஜினி கட்சி தொடங்கி, பாஜக பிரமு கர் ஒருவரை தனது கட்சியின் முக்கிய தலைமையில் நியமித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட பாஜகவுக்கு ஆதரவாகவர் ரஜினி என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இதன் மூலம் தேர்தலில் சில பேரங்கள் நடக்கலாம் . கமலுக்கும் அந்த நெருக்கடி உள்ளது இப்போது தன்னை பாஜகவுக்கு நெருக்கமானவர் என காட்டிக் கொள்வதன் மூலம், தானும் அந்த
பேரத்தில் இருக்கிறேன் என்று சொல்லவேண்டிய குறிப்பு தான் சூரப்பாவுக்கு ஆதரவான வீடியோ என்கின்றனர். அப்படிப் பார்த்தால் ரஜினியை விடவும் ஆபத்தான அரசியல்வாதி கமல்தான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. சூரப்பா நேர்மையானவரோ இல்லையோ ? கமலிடம் நேர்மை இல்லை என்பதை அந்த வீடியோவில் வெளிப்படுத்தி விட்டார் என்றே பலரும் கூறுகின்றனர்.