“கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் பேர சொன்னாலே போதுமே” – உளறிக் கொட்டிய கமல்!

“கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் பேர சொன்னாலே போதுமே” – உளறிக் கொட்டிய கமல்!

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னையில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “மக்களுக்குச் சேவை செய்யும் அந்த ஆக்டிவ் லைஃப்ங்கிறது எனக்கு வேணும். அதனால் ஐந்து வருடத்தில் நடக்கக்கூடிய வேலையைச் சொல்றேன். ஐந்து வருடம்தான். அதுக்கப்புறம் ஒரு பத்து வருடம் வேலை செய்யனும். அதுக்கப்புறம் சக்கர நாற்காலியில் எல்லாம் இருந்துக்கிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையானது.

“கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் பேர சொன்னாலே போதுமே” – உளறிக் கொட்டிய கமல்!

எதிர்ப்புக்குப் பின் விளக்கமளித்த கமல்ஹாசன், “கலைஞர் மீது எனக்கு இருக்கும் மரியாதை அவருக்குத் தெரியும். அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறியதின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பார். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதைத் தள்ளிவந்த கூட்டங்களில் நானும் ஒருவன். ஆகவே அவரின் வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது” என்றார்.

“கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் பேர சொன்னாலே போதுமே” – உளறிக் கொட்டிய கமல்!

இச்சூழலில் இதுகுறித்த கேள்வி இன்றும் செய்தியாளர்கள் கமலிடம் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த கமல், “சக்கர நாற்காலி குறித்து பேசியது கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியது அல்ல. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது” என்றார்.

“கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் பேர சொன்னாலே போதுமே” – உளறிக் கொட்டிய கமல்!

உடனே இடைமறித்த செய்தியாளர் ஒருவர், “தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறாரா?” என்று கேட்டார். அதற்கு அவர், “தனிமனித தாக்குதல் இல்லாமல் இப்போது யார் அரசியல் செய்கிறார்கள்” என்றார். “ஸ்டாலின் என்று சொன்னாலே அவமானப்படுத்துதல் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்” என்று செய்தியாளர் கேட்க, “தமிழ் தெரியவில்லை என்றால் படியுங்கள்” என ஆத்திரத்துடன் பொறுப்பற்றத்தனமாகப் பதில் கூறினார்.