திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

 

திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் பல கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்திக்கொள்ள தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு எப்படித் தொகுதிகளைப் பிரச்சனை இல்லாமல் பங்கிட்டுக் கொடுப்பார்கள் எனும் விஷயமே இன்னும் முடியாத நிலையில், அந்தக் கூட்டணியில் புதிதாக ஒரு கட்சியில் சேருமாறு அழைத்து வருகிறார்கள்.

திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று தேர்வு செய்து களமிறங்கி வேலைகள் செய்து வருகிறது. கமலஹாசனும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு கமலஹாசனின் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலஹாசன், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கமலஹாசன் காங்கிரசுடன் வந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்பின் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கமலஹாசனை கூட்டணிக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கே எஸ் அழகிரி இன்று மீண்டும் கமலஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்திருக்கிறார்.

கமலஹாசனை திமுக கூட்டணியில் அழைப்பது காங்கிரஸின் குரலா அல்லது திமுக தலைமை காங்கிரஸ் மூலமாக தூது அனுப்பி பார்க்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏபிபி சர்வே உட்பட பலவும் இப்போது இருக்கும் திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி வருகின்றன. இருந்தபோதும் கமலஹாசனை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க என்ன அவசியம் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

ஒருவேளை சசிகலா-அமமுக – அதிமுக இணைப்பு ஏற்பட்டுவிட்டால் 4 முதல் 6 சதவீத வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு அதிகரிக்கக்கூடும் என்று பலர் கருதுகிறார்கள். அதைச் சமாளிக்க கமலஹாசனை திமுக கூட்டணிக்கு அழைக்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

கமலஹாசன் திமுக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்… அது மற்ற கூட்டணி கட்சிகளை சங்கடப்படுத்தாமல் இருக்குமா… போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஏனெனில் திமுக இன்னும் குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. அப்போதுதான் அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வென்று, யார் தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும் என்று திமுக தலைமை தொடங்கி அடிமட்ட பதவியில் இருப்பவர்கள் வரை நினைப்பதாக பரவலாக பேச்சு இருக்கிறது.

திமுக கூட்டணியில் கமல் – விடாமல் துரத்தும் காங்கிரஸ்

இந்நிலையில் 180 தொகுதிகள் திமுகவுக்கே சென்றுவிட்டால், மீதம் இருக்கின்ற 54 தொகுதிகளை காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு ஈஸ்வரன், முஸ்லிம் லீக் என்று இருக்கும் கட்சிகளுக்கு எப்படி பிரித்துக் கொடுப்பார்கள்?

இதில் கமலஹாசனும் சேர்ந்து விட்டால் இன்னும் குழப்பமே மிஞ்சும் அல்லவா? என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.