“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விதியின்படி பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதையும் வாக்காளார்களுக்குக் கொடுக்கக் கூடாது.

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஊட்டியில் அதிமுகவால் களேபரம் சிறப்பாகத் தொடங்கியது. தொடர்ந்து வால்பாறையில் வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சூழலில் இங்கு தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் கடலூரில் தணிக்கை மேற்கொண்டிருக்கும்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அக்காரில் மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் சிக்கின.

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

அதிமுக, திமுக ஊழல் கட்சிகள். அவற்றை அகற்றவே நாங்கள் வந்திருக்கிறோம் என மூச்சுக்கு முன்னூறு முறை கூறும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஏன் பரிசுப்பொருட்களைக் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா என்றும் விமர்சித்துவருகின்றனர்.