கமல் ஹாசனின் பரப்புரை திடீர் ரத்து!

 

கமல் ஹாசனின் பரப்புரை திடீர் ரத்து!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக – திமுக கூட்டணிக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கமல் ஹாசனின் பரப்புரை திடீர் ரத்து!

அதேபோல் அதிமுகவில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இருப்பினும் இந்தமுறை மூன்றாவது அணியாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் களமிறங்கியுள்ளது. இவர்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

கமல் ஹாசனின் பரப்புரை திடீர் ரத்து!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்க பொதுமக்கள் கூடிய போது அவரது காலில் அடிபட்டதாக தெரிகிறது.
ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரம் முன்பு காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வந்த கமல் சமீபத்தில் காலில் வலி ஏற்பட்டதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மீண்டும் தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

கமல் ஹாசனின் பரப்புரை திடீர் ரத்து!

இந்நிலையில் இன்று சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருந்த அவர் காலில் ஏற்பட்ட வலி காரணமாக இன்றைய மற்ற தேர்தல் நிகழ்வுகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை சிங்காநல்லூர் பொதுக்கூட்டம் மட்டும் அவர் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.