“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” : கமல்ஹாசன் இளைஞர் தின வாழ்த்து!

 

“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” : கமல்ஹாசன் இளைஞர் தின வாழ்த்து!

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அவர்களின் திறனை பாராட்டு நோக்கிலும் உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.

“மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” : கமல்ஹாசன் இளைஞர் தின வாழ்த்து!

ஐக்கிய நாடுகள் சபை 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியை உலக இளைஞர் தினமாக கொண்டாடுவதாக அறிவித்தது. கல்வி, வேலைவாய்ப்பு ,அரசியல் பங்கு என இளைஞர்களுக்கான ஒவ்வொரு தளத்தையும் அந்தந்த அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஐநாவின் கருத்தாக உள்ளது. இதனால் உலகம் முழுவதும் இந்நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் உலக இளைஞர்கள் தினம் குறித்து மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,”நாளையின் முன்னறிவிப்பாளர்கள்,மூதறிஞர்கள், முன்னோடிகள், இளைஞர்கள் தான்.
அவர்களின் அறிவு, பசியோடும், கேள்விகளோடும் திளைத்திருக்க இளைஞர் தின வாழ்த்துக்கள்.  மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்.
நாளை நமதே” என்று பதிவிட்டுள்ளார்.