“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்” : கமல் ஹாசன் புகழஞ்சலி!

 

“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்”  : கமல் ஹாசன் புகழஞ்சலி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராக நீடித்தவர். பழுத்த அரசியல்வாதி. கலையுலகிலும், அரசியல் வாழ்விலும் பிறகு முன் உதாரணமாக திகழ்ந்தவர்.

“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்”  : கமல் ஹாசன் புகழஞ்சலி!

இத்தனை புகழுக்கு சொந்தகாராக விளங்கிய கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அதன்படி இன்று கருணாநிதியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின்உள்பட நிர்வாகிகள் பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்” என்று பதிவிட்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.