“என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்” : கலாம் குறித்து கமல் ட்வீட்!

“என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்” : கலாம் குறித்து கமல் ட்வீட்!

அப்துல்கலாம்வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்” : கலாம் குறித்து கமல் ட்வீட்!

இந்தியாவின் பதினோறாவது குடியரசுத்தலைவர் ஏ.பி. ஜே. அப்துல் காலம். பிரதமரின் அறிவியல் ஆலோசகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், (ISRO) விண்வெளி பொறியாளர் என பல முக்கிய பொறுப்பு வகித்தவர். கடந்த 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் இன்றைய இளைஞர்களின் தலைவராக இருந்தது கூடுதல் சிறப்பு.

“என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்” : கலாம் குறித்து கமல் ட்வீட்!

ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய முனைவர் பட்டங்கள், பத்ம பூஷண் விருது, பத்ம விபூஷன் விருது போன்ற விருதுகளை தன்வசமாக்கியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி” என்று பதிவிட்டுள்ளார் .