“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

 

“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் திமுக – அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து மூன்றாவது அணியாக கமல் ஹாசன் களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை” என்று குறிப்பிட்டு அக்கட்சியின் தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை வெளியிட்டுள்ளார்.

“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

*ஊழலற்ற நேர்மையான விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி

*விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவை துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை உறுதி செய்து ரூபாய் 60 முதல் 70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.

“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

*தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

*ஒன்று முதல் இரண்டு கோடிப் பேருக்கு மதிப்புக்கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு உறுதி செய்து தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

*நதிநீர் இணைப்பு. அதி திறன் நீர்வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் –நீலப்புரட்சி

*விவசாயம், இயற்கை ,அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமை புரட்சி ,மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு , ஆழ்கடல் மீன்பிடி பொருளாதார வளர்ச்சி

“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

*கிராமப்புற சுய சார்பு இருக்கும் தொழிலுக்கு விவசாயத்திற்கும் மதிப்பு கூட்டுதல் ஏற்றுமதிக்கும் வாழ்வதற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும் ஸ்மார்ட் வில்லேஜ் உருவாக்கத்திற்கும் -அப்துல் கலாம் புரா திட்டம்

*அரசு பள்ளியில் கல்வி உயர்தரத்தில் மேம்பாடு, மேல்நிலை கல்வியில் 9 முதல் 10 வரை சீர்திருத்தம் ,மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு ,பயிற்றுவிக்கும் முறை பாடத்திட்டம் மாற்றம்

“NEETக்கு பதில் SEET” தேர்வு : கமல் ஹாசனின் தேர்தல் அறிக்கை!!

*1.3 கோடி பேருக்கு உலகம் தரம் வாய்ந்த தனித் திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு

*தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு SEET தேர்வு. அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் ,மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி ,உயர்கல்வியில் சமூக நிலை நாட்டப்படும்

https://twitter.com/ikamalhaasan/status/1372765490200735745

*தமிழ் மொழி ,கல்வி மொழி ,ஆட்சி மொழி ,ஆராய்ச்சி மொழி ஒரு வருடத்தில் ஆங்கில மொழிப் புலமை மற்ற மொழி பயில தேர்வு எழுத வசதி வாய்ப்பு

*மதத்தின் பெயரால் குடியுரிமை மறுப்பை முற்றிலும் எதிர்ப்போம்

*மாநில சுயாட்சி வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளை பின்பற்றி அதை நனவாக்கும்