கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது!

 

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது!

சென்னை தனியார் மருத்துவமனையில் மநீம தலைவர் கமல்ஹாசனின் வலது காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 2016 நடந்த சிறு விபத்தால் கமல்ஹாசனின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, பொருத்தப்பட்ட இம்ப்ளாண்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி அகற்றப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாகவும், 3 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தனது அரசியல், சினிமா பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது!

இதனிடையே காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவை என்றும், சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் புதிய விசையுடன் அரசியல் சுற்றுப்பயணத்துக்கு வருவேன் எனவும் கமல்ஹாசன் நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார். மேலும் இந்த ‘மருத்துவ விடுப்பில்’ உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன் என்றும் மாற்றத்திற்கான நம் உரையாடல் இடையூறின்றி செயல்படும் என்றும் கூறியிருந்தார்.