“போராட்டத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது? ” கமல் ஹாசன் ட்வீட்!

“போராட்டத்திலும்  விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது? ” கமல் ஹாசன் ட்வீட்!

விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருப்பது குறித்து கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“போராட்டத்திலும்  விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது? ” கமல் ஹாசன் ட்வீட்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் மசோதா ஆகிய மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் இன்றுடன் விவசாயிகள் போராட்டம் 6ஆவது மாதத்தை எட்டியுள்ளது.

“போராட்டத்திலும்  விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது? ” கமல் ஹாசன் ட்வீட்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.