Home அரசியல் ’விவசாயிகள் மேல் சுமையை ஏற்றத் துடிக்கிறது மத்திய அரசு’ கமல்ஹாசன்

’விவசாயிகள் மேல் சுமையை ஏற்றத் துடிக்கிறது மத்திய அரசு’ கமல்ஹாசன்

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலையிலான அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இச்சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, இதை எதிர்த்து எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இச்சட்ட முன்வரைவை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

EIA சட்ட வரைவு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

”உலகமே பசுமை விவசாயத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சாரச் சட்டத்திருத்த மசோதா – 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?

விவசாயிகளுக்கு எதிராக புது சட்டத் திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள்தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா – 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைக் குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்குப் பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புகளை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4 லட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லாக் கொள்முதல் விலை என ஏற்கெனவே பலமுனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச் சுமையையும் ஏற்றத் துடிக்கிறது இந்த அரசு.

Farmers

லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும்.

விளைவிப்பவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களைச் சிரமத்தில் ஆழ்த்தும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா – 2020ஐ திரும்பப் பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புகள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாகச் செயல்படுத்த வேண்டும்.

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையைப் பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்”.

மாவட்ட செய்திகள்

Most Popular

கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

சென்னை சென்னை ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு...

நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with the comrades எனும் நூல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக இருந்தது. இதற்கு சிலர் அளித்த...

கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி திருச்சியில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்களை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். திருச்சி...

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...
Do NOT follow this link or you will be banned from the site!