பத்திரிகையாளரை தள்ளிவிட்ட கமல்ஹாசன்!

 

பத்திரிகையாளரை தள்ளிவிட்ட கமல்ஹாசன்!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை சோதனை செய்ய வந்த போது, கமல்ஹாசன் பத்திரிகையாளர் ஒருவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் கண்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. கூட்டணிக் கட்சிகளுடன் கைகோர்த்து 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களமிறக்கினார் கமல்ஹாசன். அவர்களுள் பெரும்பாலானோர் அரசியல் பின்னணி இல்லாதவர்கள். பல மநீம வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 6% வாக்குகளை பெறுமென கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

பத்திரிகையாளரை தள்ளிவிட்ட கமல்ஹாசன்!

இன்று காலை அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன், தங்களுக்கு ஆதரவு அளித்த எல்லாருக்கும் நன்றி. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் கோஷமல்ல. அது கூட்டுக் கனவு. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் இருப்போம் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரை தள்ளிவிட்ட சம்பவம் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.

பத்திரிகையாளரை தள்ளிவிட்ட கமல்ஹாசன்!

இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த கேமராமேன் மோகனை படம் எடுக்க கூடாது எனக்கூறி தனது கையில் இருந்த கைத்தடியால் கமல் நெட்டித் தள்ளினார். நல்லவேளையாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது நடிப்பு இல்லை கமல்ஹாசன். உயிர் பிரச்சனை. நிச்சயம் சட்டரீதியாக நீங்கள் இதை எதிர்கொள்ள நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.