darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



உலக நாயகன் பிறந்தநாள் கொண்டாட்டம் : இசைஞானி இளையராஜா கச்சேரிக்கான பிரம்மாண்ட அழைப்பிதழ்!

Invitation to Rajinikanth
Invitation to Rajinikanth

உலக நாயகன் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்க 3 நாள் விழாவாக அதாவது 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்த  ராஜ் கமல்  பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  ஏற்பாடு செய்தது. அதன் படி, முதல் நாள் அன்று கமல்ஹாசன் அவரது சொந்த ஊரான பரமக்குடியில், அவரது தந்தையின் உருவச் சிலையைத் திறந்து வைத்து குடும்பத்துடன் மகிழ்ந்தார்.

kamal

இரண்டாவது நாளான 8 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தர் உருவச்சிலையைக் கமல் திறந்து வைத்தார். அதனையடுத்து, அன்று மாலை சென்னையில் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் அவர் நடித்த ஹே ராம் திரையிடப்பட்டது. அதில், கமல்ஹாசன் ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார். 

Kamal

பிறந்தநாளின் சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் 9 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், மழை மற்றும் ரசிகர் கூட்டத்தின் காரணமாக வரும் 17 ஆம்  தேதி நேரு விளையாட்டு அரசங்கத்தில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

Kamal

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்‌ ஒளிபரப்பு உரிமம்‌ விஜய்‌ தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால், 17 ஆம் தேதி நடக்கவுள்ள இன்னிசை கச்சேரிக்கான பிரம்மாண்ட அழைப்பிதழை விஜய் டி.வி மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று வழங்கியுள்ளார்.

Magendran

மேலும், அனைத்து நடிகர்களுக்கும் மகேந்திரன் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கி வருகிறார். 

2018 TopTamilNews. All rights reserved.