கமல் ஹாசன் முன்னிலை; கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவு!

 

கமல் ஹாசன் முன்னிலை; கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவு!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது . இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ,மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் நின்றனர். இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அடுத்தடுத்து எந்த கட்சி கூட்டணிக்கு முன்னிலையில் இருக்கிறது என்பது குறித்த விபரங்கள் தெரிய வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 45 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

கமல் ஹாசன் முன்னிலை; கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவு!

இந்நிலையில் கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். கமல்ஹாசன் 1391 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றுள்ளார்.பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் வரதராஜன் முன்னிலை வகிக்கிறார்.

கமல் ஹாசன் முன்னிலை; கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவு!

நாகை தொகுதியில் முதல் சுற்று முடிவில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் முன்னிலை வகிக்கிறார்.
மயிலாப்பூர் தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் த.வேலு முன்னிலை, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றர்.