‘திமுக கூட்டணியில் கமல் ஹாசன்’ – அழைக்கும் காங்கிரஸ்; அமைதி காக்கும் ஸ்டாலின்

 

‘திமுக கூட்டணியில் கமல் ஹாசன்’ – அழைக்கும் காங்கிரஸ்; அமைதி காக்கும் ஸ்டாலின்

கமல் ஹாசன் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

‘திமுக கூட்டணியில் கமல் ஹாசன்’ – அழைக்கும் காங்கிரஸ்; அமைதி காக்கும் ஸ்டாலின்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது. அதேசமயம் அதிமுக கூட்டணியில் மக்களவை தேர்தலின் போது இருந்த கட்சிகள் தொடர்ந்து நீடிப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.ஆனால் தேமுதிகவோ, அதிமுக 40 தொகுதிகள் அளித்தால் கூட்டணி என்றும் வன்னியர் இட ஒதுக்கீடு 20% அளித்தால் கூட்டணி குறித்து பேசுவோம் என்று பாமகவும் கறாராக கூறி உள்ளனர். இந்த சூழலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில் இக்கூட்டணியில் விசிக ,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் இந்த முறை சட்டமன்ற தேர்தல் நிச்சயம் கடுமையான போட்டி மிகுந்ததாக இருக்கும் என்பதால் நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான , கமல் ஹாசனை திமுக கூட்டணியில் இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. தொடர்ந்து கமல் ஹாசனை திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியினர் கூறி வரும் நிலையில், அதற்கு திமுக தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

‘திமுக கூட்டணியில் கமல் ஹாசன்’ – அழைக்கும் காங்கிரஸ்; அமைதி காக்கும் ஸ்டாலின்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “கமல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளை தான் பெறுவார். மதசார்பின்மையை சார்ந்திருக்கும் கமல், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும். கமல் தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் சாதுரியமான முடிவு எடுக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.