ஐடி ரெய்டில் சிக்கிய பொருளாளர்; ஆட்டம் காணுமா கமலின் வாக்கு வங்கி?

 

ஐடி ரெய்டில் சிக்கிய பொருளாளர்; ஆட்டம் காணுமா கமலின் வாக்கு வங்கி?

க்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரனிடம் கணக்கில் வராத வருவாய் என எழுந்த புகார் குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

ஐடி ரெய்டில் சிக்கிய பொருளாளர்; ஆட்டம் காணுமா கமலின் வாக்கு வங்கி?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரனின் திருப்பூர் வீடு மற்றும் அலுவலகம் , உறவினர்களின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ₹11.5 கோடி பறிமுதல் மற்றும் கணக்கில் வராத வருமானம் ₹80 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகள் வகித்து வரும் சந்திரசேகரன் ராஜ்கமல் FRONTIERS PRIVATE LIMITED நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளார்.

ஐடி ரெய்டில் சிக்கிய பொருளாளர்; ஆட்டம் காணுமா கமலின் வாக்கு வங்கி?

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனிடம் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் ஐடி ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, “மக்கள் நீதி மய்யம் பொருளாளர் என்பவர் தனி மனிதரும் கூட.சட்ட மீறல்கள் இருந்தால் வருமான வரித்துறை தனது பணிகளை செய்யட்டும்.மக்கள் நீதி மையம் பொருளாளர் சந்திரசேகரன் முறைகேடு செய்திருந்தால் சட்டம் வேலை செய்யும்.குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி இல்லை என சட்டத்தில் இருக்கிறது.அது தனிநபர் தொடர்புடையது. கட்சியையோ, என்னையோ பாதிக்காது” என்றார்.