வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

 

வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

சென்னை போரூர் தனியார் மருத்துவமனையிலிருந்து வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்து வந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த கமல் ஒருபுறம் விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். தேர்தல் பரப்புரை காலங்களில் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதால் அவரின் வலது காலில் வலி இருந்து வந்துள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய போவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

இந்நிலையில் வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு, மீண்டும் அரசியல் களத்திற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.