Home தமிழகம் “கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!

“கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!

கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக்காக தமிழ்நாடு அரசு தனி வானொலி தொடங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

“கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!
“கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒளி உமிழும் திரையை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டும், ஹெட்செட்களை நெடுநேரம் காதில் மாட்டிக் கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண் பார்வை செவி கேட்கும் திறனில் பிரச்சனை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம் , சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் பகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும் இதன் மூலம் கணிசமான அளவு குறைக்க முடியும்.

கல்வி தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கு என தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். மாணவர்களுக்கும் இது பயனளிக்கும். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜா தன் மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையினால் ஒரு இணைய ரேடியோவை உருவாக்கி யுள்ளார். இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுக்க முன்னெடுத்து இருக்கிறார்.

“கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!

தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 25 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதை செம்மையாக நடத்தி வருகிறார்கள். 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர்களால் பயன்பெற்று வருகின்றனர். பெரிய முதலீடு தொழில்நுட்பம் தேவை இன்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் . ஒரு மாணவருக்கு வகுப்பிற்கான நாளொன்றிற்கு அதிகபட்சம் 300 எம்பி டேட்டா தான் இதற்கு தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும், அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்தக் கல்வி ரேடியோ தளத்தினை இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரம் தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 14,500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதுமே இதன் தேவைக்கான அத்தாட்சி. தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமேயானால் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொள்ள உதவும் தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கல்விக்கு தனி வானொலி தேவை” கமல் ஹாசன் கோரிக்கை!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும்… தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தொழிலாளர் தலைவர் மறைந்த...

ஆப்கானிஸ்தானில் நிறைய முதலீடு செய்துள்ளோம்.. தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும்.. பரூக் அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி செய்யும் தலிபான்களுடன் இந்திய அரசு பேச வேண்டும் என்று பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தலிபான் கைப்பற்றியுள்ளது. தற்போது...

பஞ்சாப் அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் பதவியை இழக்க நேரிடும்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவியை...

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது… அகிலேஷ் யாதவ்

பணம் மற்றும் அதிகாரத்தின் ஆதரவாளரான பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதியை எதிர்க்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். 2021ம் ஆண்டு மக்கள் தொகை...
TopTamilNews