இலவசம் என்பது பிச்சை- வீட்டுக்கொரு கணினி இலவசம் – குழப்பும் கமல்ஹாசன்

 

இலவசம் என்பது பிச்சை- வீட்டுக்கொரு கணினி இலவசம் – குழப்பும் கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அதிமுக – திமுக தங்கள் கூட்டணி கட்சிகளை கைக்குள் வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த இரு கூட்டணிகளும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் கட்சிகள் இரண்டு.

ஒன்று சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. மற்றொன்று கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம். இதில் கமல்ஹாசன் மூன்று கட்டப் பிரசாரங்களை முடித்து, நான்காம் கட்ட பிரசாரங்களில் உற்சாகமாகக் களம் இறங்கி விட்டார். ஆனால், அவரின் பேச்சுகள் குழப்பங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இலவசம் என்பது பிச்சை- வீட்டுக்கொரு கணினி இலவசம் – குழப்பும் கமல்ஹாசன்

சில மாதங்களுக்கு முன், இலவச திட்டங்களைக் கடுமையாக எதிர்த்து பேசினார். அதன் உட்சபட்ச வார்த்தைகளாக ‘பிச்சைக்காரர்களுக்கே இலவசம் தேவை’ என்று தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அப்போதே இலவசம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவியது என்று பலரும் விளக்கினார்கள். கல்வி, மருத்துவம், மதிய உணவு உள்ளிட்டவையும் இலவசம்தான். அதையும் எதிர்கிறாரா கமல் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமல் பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அவற்றில் இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தருவதாகச் சொல்வது கவனிக்கத் தக்கதாக மாறி வருகிறது. அதேபோல, வீட்டுக்கொரு கணினி வழங்கப்படும் என்றும் கூறிவருகிறார்.

இலவசம் என்பது பிச்சை- வீட்டுக்கொரு கணினி இலவசம் – குழப்பும் கமல்ஹாசன்

இலவசம் என்பது பிச்சைகாரர்களுக்குத்தான் வேண்டும் என்ற கமலே, இலவச கணினி திட்டத்தை அறிவிக்கிறாரே என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. மாற்றி மாற்றி பேசி குழப்புகிறார் என்றும் சொன்னார்கள் பலர்.

இந்நிலையில் கமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது வீட்டுகொரு கணினி கொடுப்பது இலவசம் அல்ல. வீட்டுக்கான அவசியமான முதலீடு என்று சமாளித்திருக்கிறார். நாட்டின் சூழலைப் புரிந்துகொள்ளாமல், இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அளித்து வருவதாக கமல் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

இலவசம் என்பது பிச்சை- வீட்டுக்கொரு கணினி இலவசம் – குழப்பும் கமல்ஹாசன்

கமல் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க போவதில்லை. அதனால், இப்படியா வாக்குறுதிகளை அளிப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், திமுக – அதிமுகவின் தயாராகி வரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் சில வாக்குறுதிகளை தன் பிரசாரத்தில் பயன்படுத்துகிறார். அந்தக் கட்சிகள் அதையே சொன்னால், என்னைப் பார்த்து காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்லலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது.

குழப்பமாகப் பேசுவது கமலுக்கு கைவந்த கலை. சினிமா, பேட்டி, டிவி நிகழ்ச்சிகள் என்பதைப் போல அரசியல் மேடைகளிலும் அது தொடரும் போலிருக்கிறது.