இன்று முதல் கமல் 3 ஆம் கட்ட தேர்தல் பரப்புரை!

 

இன்று முதல் கமல் 3 ஆம் கட்ட தேர்தல் பரப்புரை!

மநீம தலைவர் கமல் ஹாசனின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை 6 மாவட்டங்களில் மேற்கொள்ள இருக்கிறார்.

இன்று முதல் கமல் 3 ஆம் கட்ட தேர்தல் பரப்புரை!

இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இன்று முதல் கமல் 3 ஆம் கட்ட தேர்தல் பரப்புரை!

சீரமைப்போம் தமிழகத்தை என்கின்ற பெரும் முழக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று , தமிழகத்தை தலைநிமிர செய்வதற்கான முயற்சியின் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வருகின்ற 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் , வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, கும்பகோணம் , புதுக்கோட்டை , காரைக்குடி ,சிவகங்கை ,பரமக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிகழ்த்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கமல் 3 ஆம் கட்ட தேர்தல் பரப்புரை!

அத்துடன் கட்டமைப்பு உறுப்பினர்களும், சார்பு அணி உறுப்பினர்களும் இணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்சாரம் நிகழ்வினை சீரும் சிறப்புடன் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.