நாம்தமிழர் கட்சி பாணியில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கல்யாணசுந்தரம்!

 

நாம்தமிழர் கட்சி பாணியில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கல்யாணசுந்தரம்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் 2009 ஆம் ஆண்டு முதல் இருந்தவர் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம். அப்போது தமிழர்களுக்கு எதிரி திராவிடம்தான் என்று மேடைகளிலும் பேட்டிகளிலும் முழங்கி வந்தார். திராவிடத்தை ஒழிப்பதே தம் பணி என்பதாகச் சொல்லுவார்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் சீமானோடு கருத்து முரண்பட்டு கட்சியிலிருந்து விலகினார். அவரோடு வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் விலகினார். இருவரும் தனி அமைப்பு தொடங்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கல்யாணசுந்தரம் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்கு பல காரணங்களைப் பட்டியலிட்டார்.

நாம்தமிழர் கட்சி பாணியில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கல்யாணசுந்தரம்!

இரு நாட்களுக்கு முன், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். அதில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு பெண்மணி திடீரென்று எழுந்து கேள்விக்கேட்டு, பிரச்சனை எழுந்தது. அந்தப் பெண்மணியை அனுப்பியதே அமைச்சர் வேலுமணி என்று ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.

ஸ்டாலினுக்கு பதில் சொல்லும் விதத்தில் அந்தப் பகுதியில் அதிமுகவினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பேராசிரியர் கல்யாண சுந்தரம் பேசினார்.

நாம்தமிழர் கட்சி பாணியில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கல்யாணசுந்தரம்!

அப்போது ஸ்டாலினையும் திமுகவையும் கடுமையாக எதிர்த்து பேசினார். சர்க்காரியா ஊழல் வழக்கு பற்றி விரிவாகப் பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என குடும்ப உறுப்பினர்கள் கட்சியை ஆக்கிரமிப்பு செய்வதால் அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது என்றும் பேசினார். பேச்சை முடிக்கையில் ‘கூட்டம் கலைந்து அப்படியே சென்றுவிடாமல் ஒவ்வொருவரும் பத்து பேரிடம் பேசி அதிமுகவுக்கு ஆதரவாக பத்து வாக்குகளாக மாற்றுங்கள்’ என்றார். இதேபோலத்தான் நாம் தமிழர் கட்சியில் இருக்கும்போதும் பேசுவார். நாம் தமிழர் கட்சியின் பல பேச்சாளர்களும் இதே பாணியில் பேசுவதைக் கேட்க முடியும்.

நாம்தமிழர் கட்சி பாணியில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கும் கல்யாணசுந்தரம்!

திராவிடத்திற்கு வாக்கு சேகரிக்க பயன்படுத்திய அதே உத்தியை திராவிடக் கட்சியான அதிமுகவுக்கு வாக்கு கேட்கவும் பயன்படுத்துகிறார் கல்யாண சுந்தரம். அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் பேசும் மைக்கில் பேச விடாமல் அறிவிப்பாளரின் மைக்கில்தான் கல்யாணசுந்தரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது