மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

 

மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

நகை, பணத்திற்காக அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்த தனியார் வங்கி காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

கரூர் மாவட்டம் வெங்கமேடு பிவிசி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(35). தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வரும் இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி(30) என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரசவத்திற்காக ஜோதி முருகேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். முருகேஸ்வரி பிரசவம் முடிந்து 3 மாதங்களில் கணவர் வீட்டுக்கு வந்தபோது பாலசுப்பிரமணியத்தின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு விசாரித்தபோது ஜோதி முருகேஸ்வரி அதிர்ந்தார். தான் பிரசவத்திற்கு சென்றிருந்த இடைவெளியில் தன் கணவர் அவருடன் வேலை பார்த்து வந்த நித்தியா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.

மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

இதனால் மாமனார், மாமியாரிடம் புகார் செய்தபோது, என் மகன் அப்படித்தான் இருப்பான். அவனுக்கு பணத்தேவை இருக்கிறது. நீ கொண்டு வந்த நகையும் பணமும் அவனுக்கு போதவில்லை. அதனால் அவன் இப்படித்தான் இருப்பான். முடிந்தால் நீயே பணத்தையும் நகையையும் கொடு என்று முருகேஸ்வரி மிரட்டி இருக்கிறார்கள்.

இதனால் அழுதுகொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் ஜோதி முருகேஸ்வரி. இதுதான் சந்தர்ப்பம் என்று கரூர் தான்தோன்றி மலையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார் பாலசுப்பிரமணி. இந்த தகவல் அறிந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றியதோடு அல்லாமல் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார் என்று ஜோதி முருகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமன் வங்கி காசாளர் சிக்கினார்

போலீஸ் விசாரணையில், முதல் மனைவியை திருமணம் செய்துகொண்டு வரதட்சணையாக வந்த, நகை பணத்தை வைத்துதான் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார் பாலசுப்ரமணி. அதன்பின்னர் பணம் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர் மூலம் தான் எதிர்பார்த்த பணம் தனக்கு வரவில்லை என்றதும் சுதாவையும் 3வது திருமணம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

பணத்திற்காக இப்படி மூன்று பேரின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாணராமனை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த வழக்கில் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவியை தேடி வருகின்றார்கள் போலீசார்.