குரங்கு பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன்னு வாக்குறுதி கொடுங்க.. ஓட்டு வாங்கிக்கோங்க.. வயநாடு மக்கள் முடிவு

குரங்கு பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன்னு வாக்குறுதி கொடுங்க.. ஓட்டு வாங்கிக்கோங்க.. வயநாடு மக்கள் முடிவு

குரங்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவேன் என்று யார் வாக்குறுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வயநாடு நகராட்சி தேர்தலில் வாக்களிக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

பொதுவாக பஞ்சாயத்து தேர்தல் சமயத்தில் சாலை, மின்சாரம், குடிநீர் வசதி போன்றவை தேவை என்று மக்கள் கேட்பார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரளாவில் வயநாடில் குரங்கு அச்சுறுத்தல் பிரச்சினைக்கு தீர்வு காணுவேன்னு வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்போம்ன்னு அந்த பகுதி நகராட்சி மக்கள் சொல்லி உள்ளார்கள்.

குரங்கு பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன்னு வாக்குறுதி கொடுங்க.. ஓட்டு வாங்கிக்கோங்க.. வயநாடு மக்கள் முடிவு
குரங்குகள்

கேரளா மாநிலம் வயநாடில் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி தேர்தல்கள் களை கட்டியுள்ளது. வயநாடின் கல்பேட்டா நகராட்சியின் ஹரிதகிரி குடியிருப்பாளர்கள் சங்கம், தங்களது நகராட்சியில் நிலவும் குரங்கு அச்சுறுத்தல் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு அளிப்பேன் என்று எந்த கட்சி வாக்குறுதி கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

குரங்கு பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன்னு வாக்குறுதி கொடுங்க.. ஓட்டு வாங்கிக்கோங்க.. வயநாடு மக்கள் முடிவு
குரங்குகள் தொந்தரவு (பைல் படம்)

கல்பேட்டா பகுதி குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், நான் 62 வயது மூதாட்டி, எல்லா ஆண்டுகளிலும் நான் தொடர்ந்து வாக்களித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை, குரங்குகள் உருவாக்கிய பிரச்சினைக்கு யார் தீர்வு வழங்குவேன் என்று எந்த வேட்பாளர் உறுதி அளிக்கிறாரோ அவருக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளேன். குரங்குகள் எனது வீட்டின் கூரையின் மீது உள்ள ஓடுகளை, எனது சமையலறைக்குள் நுழைந்து அனைத்து உணவுகளை திருடி செல்கின்றன. அவற்றுக்கு பயந்து எனது குடும்பம் சமைத்த உணவுகளை படுக்கையறையில் வைக்க தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.