கல்லணை வரும் 16ஆம் தேதி திறப்பு!

 

கல்லணை வரும் 16ஆம் தேதி திறப்பு!

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் 16 ஆம் தேதி கல்லணை திறக்கப்படுகிறது.

கல்லணை வரும் 16ஆம் தேதி திறப்பு!

கடந்த 12 ஆம் தேதி குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 2 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 5.21 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசனவசதி பெறுகிறது. விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

கல்லணை வரும் 16ஆம் தேதி திறப்பு!

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் 16 ஆம் தேதி கல்லணை திறக்கப்படுகிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 16ஆம் தேதி காலை 9.30க்கு கல்லணையை திறக்கிறார். கல்லணை திறக்கப்படுவதால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்ட நிலங்கள் பயனடையும். மேட்டூர் அணை 12 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணை திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.