Home தமிழகம் கல்லணைக் கால்வாயில் உடைப்பு... விவசாயிகளை காக்க டி.டி.வி.தினகரன் கோரிக்கை

கல்லணைக் கால்வாயில் உடைப்பு… விவசாயிகளை காக்க டி.டி.வி.தினகரன் கோரிக்கை

தமிழக அரசின் நீர்நிலைகளை பராமரிக்கும் லட்சணத்திற்கு கல்லணைக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சி என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்ட பிறகும் காவிரி டெல்டாவின் பல இடங்களில் அவசரக் கோலத்தில் அரைகுறையாகத் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டாண்டுகளாக கடைசி நேரத்தில் ஆறுகள், வாய்க்கால்களைப் பெயரளவுக்குத் தூர்வாரி கணக்கு காண்பிப்பதையே வழக்கமாக வைத்திருப்பதாக விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் பழனிசாமி அரசு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட பின்னரும் சில களை ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வருகின்றன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கட்டுமானத்தின் ஈரம் காய்வதற்குள் தண்ணீரைத் திறந்துவிடும்போது புதிய கட்டுமானங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். கடந்த இரண்டாண்டுகளாக இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் அதையே செய்கிறார்கள் என்று வரும் செய்தி வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு எந்த லட்சணத்தில் தூர்வாருகிறது என்பதற்கு சமீபத்தில் பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சியாகும். கரையை சரியான முறையில் பலப்படுத்தியிருந்தால் இந்த உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்காது. பருவமழை தொடங்கி தண்ணீர்வரத்து அதிகரிக்கும்போது கல்லணைக் கால்வாயில், மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். ஆனால் கரையை சரியான முறையில் பலப்படுத்தாததால் இந்த உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் பணித்துறை. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதில் டெண்டர் விட்டு நிதி ஒதுக்க முடியும் என்பதில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

http://


தூர்வாருவதைத்தான் இந்த ஆட்சியாளர்கள் முறையாகச் செய்யவில்லை, கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான பணிகளையாவது செய்திட வேண்டும். பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை இணைந்து தொடர்ந்து நீர்நிலைகளைக் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள்’ வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்த 'டெல்லி சலோ' போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம், தற்போது வரை நிறைவு பெற்றதாக இல்லை....

தலைவிக்காக சூப்பர்மேனாக மாறிய விஜய் #AMMA #Thalaivi

அரசியலில் தனி முத்திரை பதித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று. சென்னை அப்பல்லோவில் 74 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி...

ரயில் பயணி சுட்டுக்கொலை; தலைமறைவான சிஆர்பிஎப் வீரர் 18 ஆண்டுகளுக்கு பின் கைது

திருவள்ளூர் ரயிலில் இடம்தர மறுத்த பயணியை சுட்டுகொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த சிஆர்பிஎப் தலைமை காவலரை 18 ஆண்டுகளுக்கு பின், திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைதுசெய்தனர்....

தேனியில் வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி தேனியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் புதிய வேளாண்...
Do NOT follow this link or you will be banned from the site!