பரபரப்பு… கள்ளக்குறிச்சி காங். வேட்பாளர் படுகாயம்… தீவிர சிகிச்சை!

 

பரபரப்பு… கள்ளக்குறிச்சி காங். வேட்பாளர் படுகாயம்… தீவிர சிகிச்சை!

கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அங்கு கே.ஐ.மணிரத்தினம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். பிரச்சாரத்திற்காக இன்று காலை உளுந்தூர்பேட்டை பகுதியிலிருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தியாகதுருகம் அருகே சின்ன மாம்பட்டு கிராமப் பகுதியில் எதிர்பாராத விதமாக முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயனன்றிருக்கிறார்.

பரபரப்பு… கள்ளக்குறிச்சி காங். வேட்பாளர் படுகாயம்… தீவிர சிகிச்சை!

விபத்து நேராமல் இருக்க கார் ஓட்டுநர் காரைத் திருப்பியபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிரத்னம், அவரது மகன் அரவிந்தன், அவரது உதவியாளர் திருநாவுக்கரசு, ஓட்டுநர் கவுதமன் ஆகியோர் படுகாயமடைந்தனர். நால்வரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.