டிடிவி தினகரனுக்கு பதிலாக.. ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவது யார் தெரியுமா?

டிடிவி தினகரனுக்கு பதிலாக.. ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவது யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகளையும் ஓவைசிக்கு 3 தொகுதிகளையும் மற்ற 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கியது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்தது. நேற்று அந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

டிடிவி தினகரனுக்கு பதிலாக.. ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவது யார் தெரியுமா?

தேமுதிகவுக்கு அமமுக கூட்டணியில் 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளின் பட்டியலையும் நேற்று டிடிவி தினகரன் வெளியிட்டார். இந்த நிலையில், அமமுகவின் நான்காம் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரனுக்கு பதிலாக.. ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவது யார் தெரியுமா?

அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – காளிதாஸ், அரக்கோணம் – மணிவண்ணன், ராணிப்பேட்டை – வீரமணி, ஆற்காடு – ஜனார்த்தனன், கீழ்பென்னாத்தூர் – கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் – ராணி ரஞ்சிதம், நாங்குநேரி – பரமசிவ ஐயப்பன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் கடம்பூர் ராஜை எதிர்த்து, டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். இதனால், தினகரன் எம்.எல்.ஏவாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் காளிதாஸ் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.