சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் ஒரு லட்சம் பேர் இறக்க நேரிடும்- எம்.பி. கலாநிதி வீராசாமி

 

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் ஒரு லட்சம் பேர் இறக்க நேரிடும்- எம்.பி. கலாநிதி வீராசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் ஒரு லட்சம் பேர் இறக்க நேரிடும்- எம்.பி. கலாநிதி வீராசாமி

மறைந்த எம்.எல்.ஏ. அன்பழகனின் உருவப் படத்திற்கு தண்டையார்பேட்டை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, “தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகை உள்ளது. ஆரம்பத்திலேயே சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தால், கொரோனா தொற்றை தடுத்திருக்க முடியும். தற்போது சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் டிசம்பர் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேர் இறக்க நேரிடும். அனைவருக்கும் பரிசோதனை செய்யாததால் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்பதை மக்கள் கடைபிடிக்க வேண்டும்” எனக்கூறினார்.