போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கலைவாணர் அரங்கம்!

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கலைவாணர் அரங்கம்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் கலைவாணர் அரங்கம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கலைவாணர் அரங்கம்!

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நாளை தொடங்குகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கலைவாணர் அரங்கம்!

இந்நிலையில் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் சென்னை கலைவாணர் அரங்கம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கலைவாணர் அரங்கம் பகுதியில் காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலைவாணர் அரங்கத்தில் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கலைவாணர் அரங்கம்!

முன்னதாக சட்டப் பேரவையில் பங்கேற்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.