• February
    18
    Tuesday

Main Area

Main



'பேட்ட' விநியோகஸ்த உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்? உண்மை நிலவரம் என்ன?

rajini
rajini

சென்னை: 'பேட்ட' படத்தின் விநியோகஸ்த உரிமையைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

இயக்குநர் கார்த்திகை சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. சான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் படத்திற்கு முதன்முறையாக  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் நாளை ரிலீசாகவுள்ளது. 

இந்நிலையில், பேட்ட படத்தின் விநியோகஸ்த உரிமை குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதில்,  ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சூட்டி அழகு பார்த்தவரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான  தயாரிப்பாளர் தாணு,  பேட்ட படத்தின் விநியோகஸ்த உரிமையைக் கைப்பற்றி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்  இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக  கலைப்புலி தாணு பேட்ட படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

2018 TopTamilNews. All rights reserved.