தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்! அமித்ஷாவுக்கு கலைப்புலி தாணு கடிதம்

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்! அமித்ஷாவுக்கு கலைப்புலி தாணு கடிதம்

கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு குறைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியுடன் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் புதுப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சூழலில் வரும் நடிகர் விஜயும், சிம்புவும் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்! அமித்ஷாவுக்கு கலைப்புலி தாணு கடிதம்

இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பழனிசாமி 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தார். ஆனால் மத்திய அரசு 50 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதால் தமிழக அரசு 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்ற உத்தரவை திரும்பப்பெற்றது.

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்! அமித்ஷாவுக்கு கலைப்புலி தாணு கடிதம்

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று Film Federation of India அமைப்பின் தலைவரும் தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியா முழுவதும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பதை 100 சதவீதமாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.