“பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம்” – செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

“பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம்” – செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.

“பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம்” – செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம்” – செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

இந்நிலையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசும் முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எனக்கு இணையாகவும், துணையாகவும் இருக்கும் என் மனைவிக்கு நன்றி என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் பென்னிகுக் நினைவிடத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, “பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்; அதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், அதனை மாற்ற அரசு தயாராக இருக்கிறது. தவறாக சொல்லக்கூடாது” என்றார்.மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்க மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வள ஆதார துறையின் பொறியாளர் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது . ஆனால் இந்த குடியிருப்பில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக பாமக ,அதிமுக ஆகிய கட்சிகள் கூறிவருகின்றனர், அத்துடன் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு தான் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.