darbar
  • January
    20
    Monday

Main Area

Main



விடுதலைக்குத் தயாரானது கார்த்தியின் கைதி! 

கார்த்தி
கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநகரம் படத்தின் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாகக் கதாநாயகிகள் யாரும் இல்லை. ஒரு இரவில் நடக்கும் நிகழ்வை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் லோகேஷ் இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கைதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஆனால் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் அதில் குறிப்பிடவில்லை. 

முன்னதாக இந்த படம் விஜயின் பிகில் படத்துடன் தீபாவளி ரேஸில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.