darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட கார்த்தியின் கைதி 

கார்த்தி
கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை. 

ஒரு இரவில் நடக்கும் நிகழ்வை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் லோகேஷ் இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கைதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேஸில் விஜயின்  பிகில் மற்றும் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.