மம்தாவால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது…. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

 

மம்தாவால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது…. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

மேற்கு வங்கத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது என பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர் மம்தா பானர்ஜி. அவருக்கு தற்போது பெரும் தலைவலியாக உள்ள பா.ஜ.க. 2021ல் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தாவால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது…. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா
கைலாஷ் விஜய்வர்கியா

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. மம்தா பானர்ஜி கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க பா.ஜ.க.வுக்கு மத்திய கண்காணிப்பாளராக கைலாஷ் விஜய்வர்கியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மம்தாவால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது…. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா
திரிணாமுல் காங்கிரஸ்

கைலாஷ் விஜய்வர்கியா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சில மக்களுக்கு கட்சிதான் முதலில், அதன்பிறகுதான் நாடு, அதனால்தான் நாட்டு மக்கள் அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இந்த நாட்களில் அதிகம் மேற்கு வங்கத்தில் இருப்பேன், மம்தா பானர்ஜி 100 இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார் என நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், ஏனென்றால் அவருக்கு அதிகாரம் குறித்துதான் கவலை நாட்டை பற்றி இல்லை. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். கடினமான முடிவுகளை எடுக்க தயங்காத தலைவர் அவர். வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.