5 மாதத்துக்கு பிறகு செய்ய வேண்டிய வேலையை இப்போதே தொடங்கி விட்டார்.. கிண்டலடித்த பா.ஜ.க… கொந்தளித்த மம்தா கட்சி

5 மாதத்துக்கு பிறகு செய்ய வேண்டிய வேலையை இப்போதே தொடங்கி விட்டார்.. கிண்டலடித்த பா.ஜ.க… கொந்தளித்த மம்தா கட்சி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு ஒரு கிராமத்தில் பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்ததை, தீதி 5 மாதத்துக்கு பிறகு செய்ய வேண்டிய வேலையை இப்போதே தொடங்கி விட்டார் என்று பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் பிர்பூம் மாவட்டம் போல்பூருக்கு சென்று விட்டு கொல்கத்தாவுக்கு திரும்பும் வழியில் திடீரென பயண திட்டத்தை மாற்றி அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள உணவகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்கு சமையல் செய்து கொண்டு இருந்த ராம பாக்தி என்ற பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்தார். இதனை பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கிண்டலடித்துள்ளார்.

5 மாதத்துக்கு பிறகு செய்ய வேண்டிய வேலையை இப்போதே தொடங்கி விட்டார்.. கிண்டலடித்த பா.ஜ.க… கொந்தளித்த மம்தா கட்சி
கைலாஷ் விஜயவர்கியா

கைலாஷ் விஜய்வர்கியா தனது டிவிட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜி சமையல் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்ததோடு, தீதி (மம்தா பானர்ஜி) 5 மாதங்களுக்கு பிறகு செய்ய உள்ள வேலையை இப்போதே செய்ய தொடங்கி விட்டார் . என்று பதிவு செய்து இருந்தார். இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாதத்துக்கு பிறகு செய்ய வேண்டிய வேலையை இப்போதே தொடங்கி விட்டார்.. கிண்டலடித்த பா.ஜ.க… கொந்தளித்த மம்தா கட்சி
ககோலி கோஷ் தஸ்திதர்

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதர் டிவிட்டரில், நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், அரசியலில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால், நினைவில் கொள்ளுங்கள்.. பெண்களை மீண்டும் சமையலறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள பா.ஜ.க.விடமிருந்து தவறான கருத்துக்களால் நம் நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.