சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது கார்த்திக் நடித்த “கைதி” திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் தான் என்று சொல்லித்தான் படத்தை விளம்பரமே செய்தார்கள். இதனால் இப்படம் வெற்றி பெறுமா? என பலரும் சந்தேகித்தனர். ஆனால் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களை உடைத்தெறிந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி அடைந்தது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாறிய இந்த கைதி திரைப்படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக ஹிந்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என இப்படத்தின் தயாரிப்பாளர் உறுதியுடன் தெரிவித்தார். இந்த நிலையில் கார்த்திக் நடித்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு கைதி செல்கிறது. அதாவது, டொரன்டோவில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு கைதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

Most Popular

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...